கர்ணன் திரைப்படத்தின் புதிய அப்டேட்…. கலைப்புலி தாணு ட்வீட்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய தமிழ் திரைப்படம் கர்ணன். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி தாணு அவர்கள் தயாரித்துள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் யோகி பாபு மற்றும் லாலு ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டே இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டது.
இந்நிலையில், படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று நாளை வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளார்கள்.
ஒரு சர்ப்ரைஸ் அப்டேட் #Karnan
ஜனவரி 31 வரை காத்திருங்கள். @dhanushkraja @mari_selvaraj @Music_Santhosh https://t.co/OR0rH127WX pic.twitter.com/6PNDPYtF80— Kalaippuli S Thanu (@theVcreations) January 29, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!
February 13, 2025![Kannadi Poove - Retro](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kannadi-Poove-Retro-.webp)
தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?
February 13, 2025![Vidaamuyarchi Ott Release](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Vidaamuyarchi-Ott-Release.webp)
“எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை” – அமைச்சர் ரகுபதி!
February 13, 2025![ragupathy](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ragupathy.webp)
புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்!
February 13, 2025![Nirmala Sitharaman](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Nirmala-Sitharaman.webp)
SL vs AUS: 2வது ஒருநாள் போட்டி… வானிலை, பிட்ச் ரிப்போர்ட்.! இரு அணி வீரர்கள் விவரம்.!
February 13, 2025![Sri Lanka vs Australia](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sri-Lanka-vs-Australia.webp)
த.வெ.க விஜய் பற்றிய கேள்வி…”ஐயோ சாமி”.. ஓ.பி.எஸ் கொடுத்த ரியாக்ஷன்!
February 13, 2025![tvk vijay o panneerselvam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-o-panneerselvam.webp)