ஜகமே தந்திரம் படத்தின் புதிய அப்டேட்..!!
ஜகமே தந்திரம் படம் குறித்த வீடியோ ஒன்று இந்த வாரம் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். y not studios தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மே 1 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றது அதற்கு பிறகு இந்த திரைப்படம் “நெட்பிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் வருகின்ற ஜூன் மாதம் 18 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது ஜகமே தந்திரம் படம் குறித்த வீடியோ ஒன்று இந்த வாரம் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளார்கள். மேலும் ஜகமே தந்திரம் திரைப்படம் 17 மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.