சீனாவில் புதிய வகை வைரஸ்: மீண்டும் முழு ஊரடங்கு..!
சாங்சுனில் புதிய வகை கொரோனா:
உலகளவில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில், சீனாவில் மீண்டும் புதிய வகை கொரோனா அதிகரித்துள்ளன. சீனாவின் வடகிழக்கு நகரமான சாங்சுனில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. 90 லட்சம் பேருக்கு மேல் மக்கள் வசிக்கும் சாங்சுன், ஜில்லின் மாகாணங்களில் கொரோனா அதிகரிப்பால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சாங்சுன் மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க சீன அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
முழு ஊரடங்கு அமல்:
சீனாவின் வட கிழக்கு நகரங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 255 பேர் உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு நகரமான சாங்சுனில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 4,194 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாங்சுன் உள்ளிட்ட வட கிழக்கு சீன நகரங்களில் கொரோனா தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கு உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதிவிரைவு ஆண்டிஜன் பரிசோதனை:
சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிவிரைவு ஆண்டிஜன் பரிசோதனைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா பாதிப்பை துல்லியமாக கண்டறிய அதிவிரைவு ஆண்டிஜன் பரிசோதனை முதல் முறையாக சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனாவில் பரவும் புதிய வகை வைரஸ் எந்த மாதிரியானது, அதன் பரவும் வேகம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.