எச்சரிக்கை: புதிய வகையான கொரோனா.. இங்கிலாந்தில் மூன்றடுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்!
இங்கிலாந்தில் புதிய வகையான கொரோனா வைரஸ் பரவிவரும் காரணத்தினால், அங்கு மூன்றடுக்கு கொரோனா ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்பொழுது கொரோனா பரவல் குறைய தொடங்கியது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, அவசர கால ஒப்புதலுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இங்கிலாந்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போட்டு வருகிறது. இந்தநிலையில், லண்டனில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது, புதிய வகையான கொரோனா வைரஸ் எனவும், இது இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் வேகமாக பரவிவருகிறதாகவும் சுகாதார செயலாளர் மாட் ஹான்ஹாக் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், கொரோனாவின் இந்த புதிய வகை குறித்து இங்கிலாந்து ஏற்கனவே உலக சுகாதார நிறுவனத்திற்கு அறிவித்துள்ளது. மேலும் விஞ்ஞானிகள் புதிய உருமாற்றத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கியுள்ளதாகவும் கூறினார். தலைநகர் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் மீது மூன்றடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கபடாவிட்டால் பொருளாதாரத்தில் பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கூறினார். இதன்காரணமாக இங்கிலாந்தில் மூன்றடுக்கு கொரோனா ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.