முகத்தை ஸ்கேன் செய்தால் கொரோனா கண்டறியும் புதிய கருவி..!
அபுதாபியில் கொரோனா நோயாளிகளை கண்டுபிடிப்பதற்கான ஸ்கேன் செய்யும் கருவியை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதால் மால்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் விமானங்கள் இயக்கப்பட்டுகின்றது. இந்நிலையில், இந்த பகுதிகளில் கொரோனா நோயாளிகளை உடனடியாக கண்டுபிடிப்பதற்கான ஸ்கேன் செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
மால்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு வருபவர்கள் இந்த கருவியில் ஸ்கேன் செய்தால் அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா..? அல்லது இல்லையா..? என்பதை ஒரு நிமிடத்தில் காட்டி கொடுக்கிறது. இந்த கருவி தொலைபேசி வடிவத்தில் சிறியதாக உள்ளது.