ஒலிம்பிக்போட்டியில் புதியதாக பேஸ்பால் ,மலையேற்றம் ,அலைச்சறுக்கு !
வருகின்ற 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.இந்த ஒலிம்பிக் போட்டிக்காக ஜப்பான் நாட்டு வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் புதிய போட்டிகளை ஜப்பான் அறிமுகம் செய்ய உள்ளது.அதில் பேஸ்பால் ,மலையேற்றம் ,கராத்தே ,அலைச்சறுக்கு ,ஸ்கேட் போர்டிங் ஆகிய விளையாட்டுகள் ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
ஜப்பானில் உள்ள ஷோனான் கிராமத்தில் தான் இந்த அலைச்சறுக்கு விளையாட்டு தோன்றியது.ஜப்பானில் தோன்றிய இந்த விளையாட்டு ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டு உள்ளதால் அந்நாட்டு வீரர்கள் பெருமையாக இருப்பதாக கூறியுள்ளனர்.
இந்த அலைச்சறுக்கு ஒலிம்பிக் போட்டி சிபா நகரில் உள்ள lchinomiya கடற்கரையில் நடைபெற உள்ளது.