தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள நானே வருவேன் படத்தின் தலைப்பு ராயன் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
இயக்குனர் செல்வராகவன் மற்றும் தனுஷ் இருவரும் 10 ஆண்டுகளுக்கு பிறகு நானே வருவேன் படத்தில் இணையவுள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி வெளியானது.
படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது படத்தின் டைட்டில் மற்றும் கதையை இயக்குனர் செல்வராகவன் மாற்ற முடிவு செய்துள்ளதாகவும், படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு ராயபுரத்தில் எடுக்கப்படவுள்ளதாகவும், படம் அண்ணன் தம்பி கதையை கொண்டதாகவும், இந்த படத்தில் தனுஷிற்கு தம்பியாக நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…