அந்நியன் ரீமேக் படத்திற்கு வந்த புதிய சோதனை..??
அந்நியன் படத்தின் உரிமம் தன்னிடம் இருப்பதாகவும் ரீமேக் செய்வதற்குரிய முறையான அனுமதியை இயக்குனர் ஷங்கர் பெறவில்லை என்றும் அந்நியன் படத்தில் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அந்நியன. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை செய்தது. இந்த திரைப்படத்திற்கான இரண்டாம் பாகம் வெளியாகுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது அந்நியன் திரைப்படத்தின் இயக்குனர் ஷங்கரே ரீமேக் செய்ய உள்ளதாக நேற்று அறிவித்திருந்தார்.
இதற்கான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதுகுறித்து அவர் கூறுகையில் ” அந்நியன் திரைப்படத்தை படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளேன். இதில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க உள்ளார். பிரம்மாண்டமாக உருவாகயிருக்கும் இந்த திரைப்படத்தின்பென் ஸ்டூடியோஸ் டாக்டர் ஜெயந்திலால் கடா, காட் ப்ளஸ் எண்டர்டெய்ண்ட்மெண்ட் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்க உள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற 2022 ஆம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் நேற்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அந்நியன் படத்தின் உரிமம் தன்னிடம் இருப்பதாகவும் ரீமேக் செய்வதற்குரிய முறையான அனுமதியை இயக்குனர் ஷங்கர் பெறவில்லை என்றும் அந்நியன் படத்தில் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.