இஸ்ரேலில் புதிய உளவு செயற்கை கோள் ஒபேக்-16 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!
இஸ்ரேலில் புதிதாக ஒபேக்-16 எனும் புதிய உளவு செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
மேம்பட்ட திறன் கொண்ட மின் ஒளியில் உளவு செயற்கைக்கோள் தான் ஒபெக் -16.இது இன்று அதிகாலை 4 மணி அளவில் விண்ணில் ஏவப்பட்டது. தகவல்களை பெறுவதற்காக இது பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பிற்கான தொழில்நுட்ப மேன்மையும் உளவுத்துறை திறன்களும் இஸ்ரேலுக்கு அவசியம் என்று பாதுகாப்பு மந்திரி பென்னி காண்ட்ஸ் தெரிவித்துள்ளார். புதிய உளவு செயற்கைக்கோள் ஏவப்பட்டதால் இஸ்ரேல் ஆராய்ச்சிக்கூடத்தில் மகிழ்ச்சி நிலவி உள்ளது.