குழந்தை நட்சத்திரங்களை நடிக்க வைப்பதற்கான ஏற்கனவே உள்ள நடைமுறைகள் 90% அப்படியே நிறைவேற்றப்படும். – குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையர்.
திரைப்படங்களில், சீரியல்களில், டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள், யூடியூப் சேனல்கள், சமுக வலைதளங்கள் என பல்வேறு ஊடகங்களின் மூலம் குழந்தை நட்சத்திரங்களின் நடிப்பு அண்மை காலமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதன் மூலம் பல்வேறு புகார்களும் அவ்வப்போது எழுந்து வருகிறது. குழந்தைகளையும் அதிக நாட்கள் அதிகமான நேரம் வேலை வாங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இதனை குறிப்பிட்டு தான் அண்மையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு அதனை வெளிப்படுத்தி இருந்தது. தற்போது அதனை மீண்டும் உறுதி செய்துள்ளது. இது குறித்து குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையர் பிரியங்க் கணுங்கோ பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதாவது குழந்தை நட்சத்திரங்களை நடிக்க வைப்பதற்கான ஏற்கனவே உள்ள நடைமுறைகள் 90% அப்படியே நிறைவேற்றப்படும். அதை தாண்டி 27 நாட்கள் தொடர்ந்து குழந்தைகளை நடிக்க வைக்க கூடாது. அதேபோல் தினமும் 6 மணி நேரம் மட்டுமே அவர்களிடம் வேலை வாங்க வேண்டும்.
அவர்களுக்கு மனரீதியாக எந்தவித பிரச்சனையும் வந்து விடக்கூடாது. அவர்களின் வயதுக்கு மீறிய கதாபாத்திரத்தில் குழந்தைகளை நடிக்க வைக்க கூடாது. என்று ஏற்கனவே அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை மீண்டும் உறுதிபட கூறியுள்ளார் குழந்தைகள் நல உரிமை ஆணையர் பிரியங்க் கணுங்கோ.
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…