பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இயக்குநர் பாரதிராஜா அவர்களின் தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இயக்குனர் பாரதிராஜா இது குறித்து தயாரிப்பாளர்களுக்கு வெளியிட்ட அறிக்கையில், “அன்புள்ள தயாரிப்பாளர்களே கொஞ்சம் வலியோடுதான் தொடங்குகிறேன். பிரசவம் வலி மிக்கதுதான். ஆனால் இறப்பு அவசியமாச்சே அப்படித்தான் இந்த இன்னொரு முயற்சியும். புதிய சங்கத்தின் பிறப்பும் அவசியமாகிறது தாய் என்பவள் இன்னொரு உயிரை இவ்வுலகிற்குப் பரிசளிப்பவள் தனக்குள்ளேயே எல்லா வற்றையும் வைத்துக் கொண்டிருப்பவள் அல்ல. தாய்க்கு ஒரு பிரசவம் எப்படி வலிக்குமோ அதே வலி பிள்ளைக்கும் இருக்கும்
தாயிலிருந்து இன்னொன்றாய் பிரியும் குழந்தைக்கு உள்ள பெரு வலியை இங்கு யாருமே பேசவில்லை அதன் வலியை அப்பிள்ளை வெளிப்படுத்தாது அவ்வலியை நாம் உணராமலே போய்விடுகிறோம் தாய் சங்கத்தை உடைக்கவில்லை. அவள் அப்படியே மெருகுற இருப்பாள். திரை விட்டின் ஆளுமை அவள்தான் அவளை விட்டு யாரும் எங்கும் போகவில்லை பிரித்தெடுக்கவும் இல்லை இது செயல்பட வேண்டிய காலகட்டம்.
கொரானாவினால் நுரையீரல் பாதிக்கப்பட்ட சினிமாவை நம் திரையகத்தைச் சார்ந்தவர்களே மருந்து கொடுத்து சரியாக்க வேண்டிய நேரம் இது கையைப் பிசைந்து கொண்டே இன்னும் எவ்வளவு நாட்கள் காத்திருப்பது அதனால் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிர்வாகிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தறிந்து மற்ற நிர்வாகிகள் குழுவினர் விபரம் பின்னர் அறிவிக்கப்படும். பாரதிராஜாவாகிய எனது தலைமையில் உறுப்பினர் சேர்க்கை
இன்றிலிருந்து தொடங்குகிறது.இதைப் பிரித்தாள்கிறோம் என யாரும் நினைக்க வேண்டாம் சில முக்கிய முடிவுகளுக்காய் உழைக்க இருக்கிறோம் நிறைவாக சொல்வதென்றால், இப்பிறப்பின் செயல்பாடுகள் சினிமாவின் ஆரோக்கியம் கருதியே தொடங்குகிறது
பிள்ளைகளும், தோழர்களும், இணை வயதினரும், என்னை மூத்தோரும் இந்த அவசியத்தை இக்கட்டான சூழல் கருதி புரிந்துகொள்ள வேண்டுகிறேன் என்று பதிவு செய்துள்ளார்.
— Bharathiraja (@offBharathiraja) August 3, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)