26 ஆம் தேதி வெளியாகும் டாக்டர்….. வெளியான புதிய போஸ்டர்..!
டாக்டர் படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திலிருந்து வெளியான 3 பாடல்களும் பட்டையை கிளப்பி வருகிறது. நேற்று செல்லமா செல்லமா பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.
இதனை தொடர்ந்து இந்த படத்திற்கான டிரைலர் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. அதற்கான புதிய போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை பார்க்க சிவகார்திகேயன் ரசிகர்கள் மட்டுமில்லாமல் தளபதி விஜய் ரசிகர்களும் காத்துள்ளார்கள்.
It’s #Doctor month! Gearing up for full-scale promotions ????#DoctorFromMarch26 #Doctor @Siva_Kartikeyan @Nelsondilpkumar @anirudhofficial @SKProdOffl #Vinay @priyankaamohan @DoneChannel1 @proyuvraaj @sonymusicsouth @gobeatroute pic.twitter.com/GpKlNTI5Xh
— siva prakasam {Siva upgraded onlineskfc Team} (@sivaupgradedksp) March 2, 2021