பஹத் பாசில் பிறந்தநாள் பரிசாக “விக்ரம்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு.!

பஹத் பாசில் பிறந்த நாளை முன்னிட்டு விக்ரம் படத்தின் புதிய போஸ்டர் வெளியிட்டு தனது வாழ்த்துக்களை லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் பிரபல நடிகரான பஹத் பாசில் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்திலும், சூப்பர் டீலக்ஸ் படத்திலும் நடித்திருந்தார். தற்போது அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக புஷ்பா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகவுள்ளது.
இதனை தொடர்ந்து மீண்டும் தமிழில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மிரட்டலான தோற்றத்தில் கமலுடன் பஹத் பாசில் இருந்ததால் ரசிகர்களுக்கு மத்தியில் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியது.
இந்த நிலையில், இன்று நடிகர் பஹத் பாசில் 39- வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் ட்வீட்டரில் happybirthdayfafa என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
இதனையடுத்து இவரது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் விக்ரம் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Wishing you a wonderful birthday and a fantastic year ahead #FahadhFaasil ✨#happybirthdayfafa pic.twitter.com/po2j9Gk4eX
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 8, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025