உடன்பிறப்பே படத்திலிருந்து வெளியான புதிய புகைப்படங்கள்.!

Default Image

உடன்பிறப்பே படத்திலிருந்து சில புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் உடன்பிறப்பே. இயக்குனர் இரா.சரவணன் இயக்கும் இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் ஒளிபதிவாளராக வேல்ராஜ் பணியாற்றியுள்ளார்.

அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தங்கையாக நடிகை ஜோதிகாவும், அண்ணனாக நடிகர் சசிகுமாரும் நடித்துள்ள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக  வரும் அக்டோபர் மாதம் அமேசான் பிரேமில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், தற்போது உடன்பிறப்பே படத்திலிருந்து சில புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் நடிகை ஜோதிகாவுடன் நடிகர் சூரியும் உள்ளார்.மற்றோரு புகைப்படத்தில் சமுத்திரக்கனி, தீபா, சசிகுமார், சூரி, ஆகியோர் உள்ளனர்.  இதோ அந்த புகைப்படங்கள்.
Udanpirappe
Udanpirappe
Udanpirappe

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்