பிசாசு 2 படத்திலிருந்து வெளியான புதிய புகைப்படங்கள்.!

பிசாசு 2 படத்திலிருந்து வெளியான புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மிஸ்கின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ராஜ்குமார் பிச்சுமணி, பூர்ணா, அஜ்மல் அமீர், சந்தோஷ் பிரதாப், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
ராக்ஃபோர்ட் எண்டர்டைமண்ட் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தின் முதல் பாடலான உச்சந்தல ரேகையிலே என்ற பாடல் வரும் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி வெளியகிறது. இந்நிலையில், பிசாசு 2 திரைப்படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025