வாடிவாசல் படம் ஆரம்பம்.! வெளியான புதிய புகைப்படங்கள்.!

சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி அணைத்து சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் வாடிவாசல். ஜல்லிக்கட்டு கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குவதால் படத்தின் மீது மிகவும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் . உதவி இயக்குனராக கருணாஸ் பணியாற்றுகிறார்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட்டிங்நடந்துள்ளது. அதில், ஜல்லிக்கட்டு செட் அமைத்து ஷூட்டிங் நடந்துள்ளது.
இதில் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சூர்யா, கலைப்புலி தாணு ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். மூவருக்கும் தலைப்பாகை அணிவித்து பூஜை செய்த பொருட்களை வழங்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதேபோல் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இருவரும் ஜல்லிக்கட்டு செட்டில் வாடிவாசல் அருகே நிற்கும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!
March 4, 2025
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025