வரலாற்றை மாற்றி அமைத்த புதிய வகை ஆந்தை இனம்!
ஆந்தைகளை பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆந்தைகள் பகலில் மிகவும் மந்தமாக செயல்படும். இரவில் தான் அவை சுறுசுறுப்பாக செயல்படும். பொதுவாக ஆந்தைகள் மரங்களில் தான் கூடு கட்டி வாழும். இது தான் வரலாறும் கூட.
இந்நிலையில், கொலம்பியாவில் புதிய ஆந்தை இனம் பகல் நேரங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இரை தேடுவதாகவும், மரத்தில் கூடு கட்டாமல், தானே கால்களை பயன்படுத்தி, தரையில் வளைத்தோண்டி அதனுள் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.