57 நாடுகளில் வேகமாக பரவும் புதிய ஒமைக்ரான்.. WHO எச்சரிக்கை.!

Default Image

ஓமைக்ரான் வேரியண்டின் பிஏ.2 என்ற துணை மாறுபாடு மிக வேகமாக பரவி வருவதாகவும், இதுவரை 57 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) நேற்று எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலையில் கொரோனா வைரஸின் மாறுபாட்டான ஒமைக்ரான் வைரஸ் பரவிக்கொண்டிருக்கிறது. ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வைரஸ் அளவிற்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், ஓமிக்ரான் வேரியண்டின் பிஏ.2 என்ற துணை மாறுபாடு உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருவதாகவும், இதுவரை 57 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு (WHO) நேற்று எச்சரித்துள்ளது.

மேலும், 10 வாரங்களுக்கு முன்பு கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாடு தோன்றியதில் இருந்து, இதுவரை ஒன்பது கோடிக்கும் அதிகமானார் பாதிக்கப்ட்டுள்ளார். இந்த எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில் பதிவான மொத்த பாதிப்பை விட அதிகம். கடந்த ஒரு மாதத்தில் உலகம் முழுவதிலும் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் 93 சதவீதம் ஓமிக்ரான் வகையைச் சேர்ந்தவை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில், Omicron BA.1, BA.1.1, BA.1, BA.3 என்ற வெவ்வேறு மாறுபாடு வந்துள்ளன. இவற்றில், BA.1 மற்றும் BA.1.1 ஆகியவை அடையாளம் காணப்பட்ட முதல் Omicrons ஆகும். BA.2 மாறுபாடு RT-PCR சோதனையில் கூட பல முறை தெரியவில்லை என்று கூறப்படுகிறது. எனவே விஞ்ஞானிகள் BA.2 ஐ Omicron இன் துணை திரிபு என்றுகூறினார்.

BA.2 இன் மரபணு அடையாளம் ஓமிக்ரானில் இருந்து சற்றே வித்தியாசமானது. இது சோதனை செய்வதை கடினமாக்குகிறது. RT-PCR சோதனை மூலம் கூட இந்த  மாறுபாட்டைக் கண்டறிவது கடினம் என கூறப்படுகிறது. ஓமைக்ரானை விட அதிக பாதிப்பு ஏற்படுத்தாது. ஆனால், அதிதீவிரமாக பரவக்கூடியது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகிலேயே டென்மார்க் நாட்டில் புதிய ஓமைக்ரான் வைரஸால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டென்மார்க் நாட்டில்  தினமும் பதிவாகும் கொரோனா வைரஸில் 82 % புதிய உருமாறிய ஓமைக்ரான் BA.2 என்று தெரியவந்துள்ளது. ஓமைக்ரான் வைரஸை விட 1.5 மடங்கு வேகமாக பி.ஏ.2 உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவக்கூடியது என தெரிய வந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்