நோய்த் தொற்றில் இருந்து பிஞ்சுக் குழந்தைகளை காப்பாற்ற புதிய மாஸ்க்.!

Default Image

உலக முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரசால் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனாவால் 1,605,712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்த்தொற்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள யாரையும் விட்டு வைக்கவில்லை. இதனிடையே இத்தாலியின் மிகக் குறைந்த வயது நோயாளி எனக் கருதப்பட்ட இரண்டு மாத குழந்தை கொரோனா நோயிலிருந்து மீண்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் தாய்லாந்தில் உள்ள ஒரு மருத்துவமனை பிஞ்சு குழந்தைகளுக்கு கொரோனா பரவாமல் தடுப்பதில் கூடுதல் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறார். அதற்காக குழந்தைகளுக்காக ஒரு பிரத்யேகமான முகக்கவசத்தை கண்டுபிடித்துள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன. தாய்லாந்து நாட்டில் சமுத் பிரகான் மாகாணத்தில் உள்ள பாவ்லோ மருத்துவமனையின் பிரசவம் வார்டில் உள்ள சில தாய்மார்கள் தங்களின் குழந்தைகளைப் போர்வையால் போர்த்திக் கொண்டு கூடவே குட்டியான முகக்கவசங்களை அணிவித்து உள்ளனர். இதன் மூலம் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முடியுமென்று மருத்துவமனை வட்டாரம் கூறியுள்ளது. அந்தப் புகைப்படங்கள்தான் தற்போது வைரலாக மாறியுள்ளது. இது குறித்து பாவ்லோ மருத்துவமனையின் முகநூல் பக்கத்தில், எங்கள் மருத்துவமனையில் பிறந்த பிஞ்சு குழந்தைகளுக்குக் கூடுதல் பாதுகாப்புடன் கூடிய முகத்தை மறைக்கும் முகக்கவசம் என்று பதிவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்