AK-61 படத்தின் பூஜை எப்போது தெரியுமா.? வெளியான புதிய தகவல்.!

Default Image

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் வசூலில் மிரட்டி வருகிறது. அடுத்ததாக அஜித் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தில் ஹீரோ , வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் அஜித் நடிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.

அஜித் இப்படத்திற்காக 25- கிலோ எடையை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஏற்கனவே 10-கிலோ எடையை குறைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தாற்காலிகமாக AK61 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது இப்படத்தின் பூஜை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது, அதன்படி AK 61 பட பூஜை வரும் 9 ஆம் தேதி நடக்கவுள்ளதாகவும், பூஜை முடிந்தவுடன் தலைப்பு அறிவிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு 18 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்