இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது “பீஸ்ட்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹேக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தற்போதெல்லாம் செய்தியாளர்கள் விஜய் படங்களுக்கு காத்திருக்கிறார்களோ இல்லையோ விஜய் பட இசை வெளியீட்டு விழாவிற் குதான் காத்திருக்கிறார்கள். ஏனென்றால் அந்த விழாவை விஜய் பேசுவார். ஏதேனும் அவருக்கு தோணும் , அவர் கடந்துவந்த சில அனுபவங்களை பகிர்வார். முக்கியமாக ரசிகர்களுக்கு குட்டி கதை ஒன்று கூறுவார்.
தெறி, மெர்சல், பிகில், சர்கார், மாஸ்டர் வரை அவர் பேசிய கருத்துக்கள் தற்போது வரை ரசிகர்களின் மனதில் இருக்கிறது. அந்த வகையில், அடுத்ததாக பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் காத்துள்ளனர்.
இந்நிலையில், பீஸ்ட் படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் மார்ச் 20-ஆம் தேதி நடைபெறும் என முன்னதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது பீஸ்ட் படத்தின் இசை வெளியிட்டு விழா ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதாகவும், அதற்கு அடுத்த வாரம் படத்தை வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…