மாநாடு படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி நாளை அறிவிக்கப்படும் என தகவல்கள் பரவி வருகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு “மாநாடு” திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 11-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
ஏற்கனவே படத்திலிருந்து வெளியான டீசர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் டிரைலருக்காக ரசிர்கர்கள் காத்துள்ளனர்.
இந்நிலையில், சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், மாநாடு படத்தின் டிரைலர் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அதாவது, மாநாடு படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி நாளை அறிவிக்கப்படும் என தகவல்கள் பரவி வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…