கர்ணன் படத்தின் அடுத்த பாடல் குறித்த புதிய தகவல்..!!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த படத்திலிருந்து வெளியான டீசர், 3 பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக 4 வது பாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது ஆம், கர்ணன் படத்தின் 4வது பாடல் அடுத்த வாரம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றார்கள்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால், ராஜீஷா விஜயன், லட்சுமி பிரியா, கௌரி கிஷன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டீசரை பார்த்த ரசிகர்கள் படத்தை பார்க்க மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளார்கள். மேலும் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி கர்ணன் படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.