மலை மகள், அலை மகள், கலை மகள் ஒரு ரூபமாக சேர்ந்து மக்களுக்கு துன்பத்தை கொடுத்து வந்த மகிசாசூரனை வாதம் செய்ததை தான் நவராத்திரி விழா என கொண்டாடுகின்றோம்.
நம்மிடம் உள்ள நல்ல எண்ணங்களையும் , திறமைகளையும் , ஒன்று இணைத்து நம்மிடம் உள்ள கெட்ட எண்ணங்களை அழிப்பது தான் நவராத்திரி விழாவாக பார்க்கப்படுகிறது. இந்த நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வு கொலு வைப்பது.
சிலர் கொலு வைப்பதை பல வருடங்களாக செய்து வருவார்கள். அவர்களுக்கு தெரியும் எப்படி கொலு வைக்க வேண்டும். எந்த வரிசையில் கொலு பொம்மைகள் இருக்க வேண்டும் என அனைத்தும் அவர்களுக்கு தெரியும்.
புதியதாக வீட்டில் கொலு வைப்பவர்கள் இந்த முறைப்படி கொலு வைக்க வேண்டும். 3 படிகள், 5 படிகள், 7 படிகள், 9 படிகள் என 11 படிகள் வரை வைக்கலாம். இந்த படிகள் மனிதனின் வாழ்க்கை உயர்ந்தது எனவும் , உலகில் உள்ள உயிரினங்கள் எப்படி படிப்படியாக தோன்றியது என்பதை உணர்த்தும் விதமாக இந்த கொலு படிகள் அமைகின்றன.
முதல் படியில்:
மரம், செடி, கொடி போன்ற ஓரறிவு கொண்டவை வைக்க வேண்டும்.
இரண்டாம் படியில்:
நத்தை, சங்கு போன்ற 2 அறிவு கொண்ட உயிரனங்கள் வைக்க வேண்டும்.
மூன்றாவது படியில்:
கரையான், எறும்பு போன்ற 3 அறிவு உயிரனங்கள் வைக்க வேண்டும்.
நான்காவது படியில்:
நண்டுக்கும், வண்டுக்கும் போன்ற 4 அறிவு உயிரனங்கள் வைக்க வேண்டும்.
ஐந்தாவது படியில்:
பறவைகள், விலங்கினங்கள் போன்ற 4 அறிவு கொண்டவை வைக்க வேண்டும்.
ஆறாவது படியில்:
மனிதன் , மனிதர்கள் கடைப்பிடிக்கும் பழக்கமான, திருமணங்கள், நடனம் ஆடுவது போல உள்ள பொம்மைகள் வைக்கலாம்.
ஏழாவது படியில்:
மனிதர்களில் உயர்ந்த மகான்களான விவேகானந்தர், வள்ளலார் பொம்மைகளை வைக்கலாம்.
எட்டாவது படியில்:
கடவுளின் அவதாரங்களான தசாவதாரம், அஷ்டலட்சுமி போன்ற பொம்மைகள் வைக்கலாம்.
ஒன்பதாவது படியில்:
முப்பெரும் தேவியர்களான பார்வதி, சரஸ்வதி, லெட்சுமி தேவி ஆகியோரின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…