புதியதாக வீட்டில் கொலு வைப்பவர்கள் இந்த முறைப்படி கொலு வைக்க வேண்டும்..!

Default Image

மலை மகள், அலை மகள், கலை மகள் ஒரு ரூபமாக சேர்ந்து மக்களுக்கு துன்பத்தை கொடுத்து வந்த மகிசாசூரனை வாதம் செய்ததை தான் நவராத்திரி விழா என கொண்டாடுகின்றோம்.

நம்மிடம் உள்ள நல்ல எண்ணங்களையும் , திறமைகளையும் , ஒன்று இணைத்து நம்மிடம் உள்ள கெட்ட எண்ணங்களை அழிப்பது தான் நவராத்திரி விழாவாக பார்க்கப்படுகிறது. இந்த நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வு கொலு வைப்பது.

சிலர் கொலு வைப்பதை பல வருடங்களாக செய்து வருவார்கள். அவர்களுக்கு தெரியும்  எப்படி கொலு வைக்க வேண்டும். எந்த வரிசையில் கொலு பொம்மைகள் இருக்க வேண்டும் என அனைத்தும் அவர்களுக்கு தெரியும்.

புதியதாக வீட்டில் கொலு வைப்பவர்கள் இந்த முறைப்படி கொலு வைக்க வேண்டும். 3 படிகள், 5 படிகள், 7 படிகள், 9 படிகள் என 11 படிகள் வரை வைக்கலாம். இந்த படிகள் மனிதனின் வாழ்க்கை உயர்ந்தது எனவும் , உலகில் உள்ள உயிரினங்கள் எப்படி படிப்படியாக  தோன்றியது என்பதை உணர்த்தும் விதமாக இந்த கொலு படிகள் அமைகின்றன.

முதல் படியில்:

மரம், செடி, கொடி போன்ற ஓரறிவு கொண்டவை வைக்க வேண்டும்.

இரண்டாம் படியில்: 

நத்தை, சங்கு போன்ற 2 அறிவு கொண்ட உயிரனங்கள்  வைக்க வேண்டும்.

மூன்றாவது படியில்:
கரையான், எறும்பு  போன்ற  3 அறிவு உயிரனங்கள் வைக்க வேண்டும்.

நான்காவது படியில்:
நண்டுக்கும், வண்டுக்கும் போன்ற 4 அறிவு உயிரனங்கள் வைக்க வேண்டும்.

ஐந்தாவது படியில்:
பறவைகள், விலங்கினங்கள் போன்ற 4 அறிவு கொண்டவை  வைக்க வேண்டும்.

ஆறாவது படியில்:
மனிதன் ,  மனிதர்கள் கடைப்பிடிக்கும் பழக்கமான, திருமணங்கள், நடனம் ஆடுவது போல உள்ள பொம்மைகள் வைக்கலாம்.

ஏழாவது படியில்:

மனிதர்களில் உயர்ந்த மகான்களான விவேகானந்தர், வள்ளலார் பொம்மைகளை வைக்கலாம்.

எட்டாவது படியில்:

கடவுளின் அவதாரங்களான  தசாவதாரம், அஷ்டலட்சுமி போன்ற  பொம்மைகள் வைக்கலாம்.

ஒன்பதாவது படியில்:

முப்பெரும் தேவியர்களான பார்வதி, சரஸ்வதி, லெட்சுமி தேவி ஆகியோரின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்