அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸுடன் சேர்ந்து புதிய வகை நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
உலக முழுவதும் மிரட்டி வரும் கொரோனா வைரஸுக்கே இன்னும் தடுப்பு மருந்துகளே கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனாவுடன் சேர்ந்து புதிய வகை அலர்ஜி நோயும் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட 17 மாகாணங்களில் இந்த புதிய அலர்ஜி நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்று ஐரோப்பிய நாடுகளிலும் கூட குழந்தைகளுக்கு கொரோனாவுடன் சேர்ந்து இந்த அலர்ஜியும் தாக்கி அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து நியூயார்க் மாகாணத்தின் கவர்னர் ஆண்ட்ரூஸ் கியூமோ கூறுகையில், குழந்தைகளுக்கு கொரோனா வைரஸுடன் சேர்ந்து புதிய வகை அலர்ஜி நோயும் தாக்குகிறது. இது ஒரு புதிய வகை நோய் என்றும் இதனால் அங்கு நிலைமை மோசமாகி வருகிறது எனவும் கூறியுள்ளார். இந்த நோயால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பும் நேர்ந்துள்ளது. இந்த நோய் ‘பீடியாட்ரிக் மல்டி சிஸ்டம் இன்பிளமேட்ரி சிண்ட்ரோம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் தாக்கி இதுவரை 5 மற்றும் 7 வயதான 2 சிறுவர்கள் மற்றும் 18 வயதான பெண் உள்ளிட்ட என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுபோன்று, நியூயார்க் மாகாணத்தில் மட்டும் 110 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாகாணத்தின் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல் மேலும் 16 மாகாணங்களில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த புதிய வகை நோய் இனி வரும் வாரங்களில் அதிகரிக்கக்கூடும் என்றும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகளுக்கு 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தாலும் சாப்பிடுவதில் சிக்கல், அடி வயிற்றில் வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, சுவாசிப்பதில் சிக்கல், தோல் நிறத்தில் மாற்றம் போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவ உதவியை அணுக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…