கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி, மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்தி, ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதனையடுத்து அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் பின் மைண்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை இராணுவம் வீட்டு காவலில் வைத்தது.
இந்நிலையில், ஆங் சான் சூகி மீது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்தது, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தை மீறியது உட்பட 6 குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து, மியான்மர் நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பு புதிய குற்றசாட்டு ஒன்றை சுமத்தியுள்ளது. தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக பயன்படுத்தி,அவர் ஆதாயம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, அதிகாரத்தை பயன்படுத்தி பணம், தங்கம் போன்றவற்றை பெற்றதாகவும் ஆங் சான் சூகி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றசாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க அந்நாட்டு சட்டத்தில் வழி உள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…