கொரோனா வைரஸ் மீதுள்ள கோபத்தை தணிக்க புதிய முயற்சி!

Default Image

கொரோனா வைரஸ் மீதுள்ள கோபத்தை தணிக்க புதிய முயற்சி.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள், இந்த வைரஸ் பயத்திற்கு மத்தியில் வாழும் மக்களுக்கு, இதுகுறித்த மன அழுத்தமும் அதிகமாகவே காணப்படுகிறது.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களில் பலர், மன உளைச்சலால் தற்கொலை கூட செய்துள்ளனர். இந்நிலையில், ஜோர்டான் நாட்டின் அம்மான் நகரில், கொரோனா வைரசால், மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு புதிய பயிற்சி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மரத்தினால் ஆன பலகை ஒன்றில், கொரோனா வைரஸின் படம் வரையப்பட்டு, அதன் மீது கோடாரி எரிந்து தங்களது கோபத்தையும், மனஅழுத்தத்தையும் தணித்துக் கொள்ள இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மரத்தினால் ஆன, பலகை மீது கோடாரி எறிய அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பலரும், ஆர்வத்துடன் அதன் மீது கோடாரியை எறிந்து தங்களது கோபம், மன அழுத்தம், ஆற்றாமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்