தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள கர்ணன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் திரைப்படங்களில் ஒன்று கர்ணன் .மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார் . சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தில் யோகி பாபு,லால் பட்டி எனும் நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் தற்போது கர்ணன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அவர் பகிர்ந்த பதிவில்,கர்ணன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் ,இந்த படத்திற்கு தன்னை தேர்வு செய்ததற்காக இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு நன்றி என்றும், தயாரிப்பாளர் தாணு அளித்த ஆதரவிற்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் கர்ணன் படத்தில் தன்னுடன் பணியாற்றிய சக நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என்று குறிப்பிட்ட தனுஷ்,கர்ணன் படத்திற்காக அழகான இசையை வழங்கிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கும் எனது ஸ்பெஷல் நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார் .இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…