பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “குக்வித்கோமாளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம், ரசிங்கர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் சிவாங்கி. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவர், அடித்த குழந்தைத்தனமான லூட்டிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று, தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இதனையடுத்து, தற்போது சிவாங்கி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். குறிப்பாக, சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த வாரம் சிவாங்கி வரவில்லை. இதனால் அடுத்த வாரம் வருவார் என்று ரசிகர்கள் காத்திருந்தார்கள், ஆனால் அவர்களுக்கு சோகம் அளிக்கும் வகையில், இந்த வாரமும் சிவாங்கி படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் வரவில்லை.
இந்நிலையில், குக் வித் கோமாளி ரசிகர்கள் ஒருவர் டிவிட்டரில் ” இந்த வாரம் சிவாங்கி வரவில்லை. இதனால் ஓவர் நடிப்பு இருக்காது என்பது போல பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவாங்கியும் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
அதில் ” இல்லாத என்ன பத்தி வெறுத்து பேசுவதற்கு இருக்குற செம்ம கோமாலிஸ் பத்தி பேசுனா இன்னும் சூப்பர் இருக்கும் யோசித்துப் பாருங்கள்” என பதிவிட்டுள்ளார். சிவாங்கிய விமர்சித்த அந்த நபரை நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…