முக்கிய அறிவிப்பு: இந்த இரண்டு நாட்களுக்கு அனைவருக்கும் நெட்பிளிக்ஸ் பிரீ.. அட உண்மைதாங்க!!
ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ், தனது புதிய வாடிக்கையாளர்களை கவர்வதற்க்கு டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இலவசமாக சேவைகளை வழங்கவுள்ளது.
ஒரு காலத்தில் ஓடிடி தளங்கள் என்றாலே, பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் வீட்டிலே முடங்கியிருந்த மக்கள், பொழுபோவதற்காக நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோ டிஸ்னி + ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் இருக்கும் படங்கள், வெப் சீரியஸ் உள்ளிட்டவைகளை பார்த்து தங்களின் நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் நெட்பிளிக்ஸ், முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. இதில் ஒளிபரப்பப்படும் பல வெப் சீரியஸ், உலகளவில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. ஆனால் இதற்கு அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதால், பலரும் அச்சமடைந்தனர். அதுமட்டுமின்றி, இந்தியாவில் நெட்பிளிக்ஸ் தளத்திற்கு அதிக பயனாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் அதிகளவில் பயனர்கள் இருக்கும் காரணமாகவும், புதிய பயனாளர்களை கவரும் நோக்குடன் நெட்பிளிக்ஸ், இந்தியாவில் அடுத்த மாதம் 5, 6 ஆம் தேதிகளில் அனைத்து வகையான படங்களும், வெப் சீரியஸும் இலவசமாக ஒளிபரப்பப்படும் என தெரிவித்துள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் உறுதிப்படுத்தியது.
A quick math equation:
5th + 6th December+ Netflix = Freeeee ????????*Checks on calculator just to be sure* #NetflixStreamFest@yamigautam pic.twitter.com/FVBB03nUk9
— Netflix India (@NetflixIndia) November 20, 2020