நெட்பிளிக்ஸ், தனது புதிய வாடிக்கையாளர்களை கவரும் நோக்குடன் இன்று மற்றும் நாளை தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச சேவைகளை வழங்கி வருகிறது.
ஒரு காலத்தில் ஓடிடி தளங்கள் என்றாலே பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த பொது பொழுபோவதற்காக நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, HBO, உள்ளிட்ட ஓடிடி தளங்களில் இருக்கும் படங்கள், வெப் சீரியஸ் உள்ளிட்டவைகளை பார்த்து தங்களின் நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் இந்தியாவில் மற்ற ஓடிடி தளங்களை விட நெட்பிளிக்ஸ் அதிகளவில் உபயோகித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்ட நெட்பிளிக்ஸ், தனது புதிய பயனாளர்களை கவரும் நோக்குடன் இந்தியாவில் இம்மாதம் 5, 6 ஆம் தேதிகளில் அனைத்து வகையான படங்களும், வெப் சீரியஸும் இலவசமாக ஒளிபரப்பப்படும் என தெரிவித்துள்ளது. அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் உறுதிப்படுத்தியது. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் நெட்பிளிக்ஸில் தளத்திற்கு செல்ல உங்களின் கிரெடிட் கார்ட் விபரம் எதுவும் கேட்கவில்லை.
எப்படி பார்ப்பது?
முதலில் உங்களின் மொபைல், டேப்லடில் “நெட்பிளிக்ஸ்” செயலியை பதிவிறக்கம் செய்யவும். உங்களின் ஜி-மெயில் முகவரியை வைத்து அதில் ஒரு அக்கவுண்ட் ஓபன் செய்யவும். பின்னர் அந்த செயலியில் இலவசமாக நீங்கள் அனைத்து வகையான படங்கள், வெப் சீரியஸை கண்டு மகிழலாம். அதுமட்டுமின்றி, www.netflix.com என்ற வலைத்தளத்தில் சென்று உங்களின் கணினி, லேப்டாப்பில் காணலாம்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…