உக்ரைன் ரஷ்யா போர் மத்தியில் நெட்ப்ளிக்ஸின் அதிரடி அறிவிப்பு..!

Default Image

உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா, கடந்த 9 நாட்களாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள் கைப்பற்றியது. மேலும், சில நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது.  உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க போரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா ஏற்கனவே வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில், போர் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க தற்காலிக போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான போரின் விளைவாக பல நாடுகள் ரஷ்யாவிற்கு பொருளாதார தடையை விதித்து வருகிறது. மேலும், சில நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திவிட்டன. இந்நிலையில்,  பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிக்ஸ் ரஷ்யாவில் அதன் எதிர்கால திட்டங்களை (ரஷ்ய படங்களை தயாரிப்பதையும், வெளிடுவதையும்) தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் ரஷ்ய மொழியை சேர்ந்த 4 சீரிஸ்கள், புரொடக்ஷன் மற்றும் போஸ்ட் புரடக்ஷன் நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் டாஷ் ஜூக் இயக்கிய க்ரைம் த்ரில்லர் தொடர் அடங்கும். இவை அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
tvk annamalai
TVK Vijay - BJP Senior Leader H Raja
tvk vijay
Union minister Piyush goyal say about StartUps
Vijay gets Y category security
Indian Astronaut Shubhanshu Shukla