மருந்து பொருட்களையும், 30 ஆயிரம் பரிசோதனை கருவிகளையும் வழங்கிய இந்திய அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாங்கி வருகிறது. அந்த வகையில், மலைப்பகுதியை முக்கியமாக கொண்டுள்ள அந்நாட்டில் இதுவரை 281 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்ட்டுள்ளனர்.
இதில் 36 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார். தற்போது அந்நாட்டில் 244 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற நிலையில், இதுவரை இதுவரை 26,700 பேருக்கு அங்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா நேபாளத்திற்கு, 30 ஆயிரம் கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகளையும், 23 டன் மருந்து பொருட்களையும் நன்கொடையாக வழங்கி உள்ளது. இந்த நன்கொடையை, இந்திய தூதர் வினய் மோகன் சவாத்ரா, நேபாள சுகாதார மந்திரி பானுபக்த தக்காலிடம் நேரில் வழங்கினார்.
இதற்கு அந்நாட்டு அரசு தான் நன்றியை தெரிவித்துள்ளது மட்டுமல்லாமல், அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி பிரதீப் கியாவாலி தனது ட்வீட்டர் பாக்கத்தில், ‘மருந்து பொருட்களையும், 30 ஆயிரம் பரிசோதனை கருவிகளையும் வழங்கிய இந்திய அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி’ என பதிவிட்டுள்ளார்.
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…
ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…
டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…