வேகமாக பரவும் பறவை காய்ச்சல் ! இந்தியாவில் இருந்து தடை விதித்த நேபாள அரசு
இந்தியாவின் 6 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ள நிலையில் கோழி இறைச்சி இறக்குமதிக்கு நேபாளம் தடை விதித்துள்ளது.
கேரளா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், ஹிமாச்சல பிரதேசத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இருந்து கோழி உள்ளிட்ட பறவைகள் இறைச்சியை இறக்குமதி செய்ய நேபாளம் தடை விதித்துள்ளது.
கோழித் தொழிலுக்கு முதன்மை சந்தையாக விளங்கும் இந்தியாவில் இருந்து கோழி உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு நேபாள விவசாய மற்றும் கால்நடை மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.அனைத்து உள்ளூர் அலுவலகங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சோதனைச் சாவடிகள் விழிப்புடன் இருக்கவும் ,கோழி இறக்குமதியை நிறுத்தவும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.கடந்த ஒரு வாரத்திலிருந்து கேரளா, குஜராத், ஹரியானா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.