ராமர் பிறந்த இடம் குறித்த சர்ச்சை.! யாருடைய மனதையும் புண்படுத்த கூறப்படவில்லை.! – நேபாள அரசு விளக்கம்.!
ராமர் பற்றிய பிரதமரின் கருத்து அரசியல் கருத்து அல்ல. யாருடைய மனத்தினையும் புண்படுத்த கூறப்படவில்லை. என நேபாள வெளியுறவு துறை அமைச்சகம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
நேபாள கவிஞர் பனுபக்தா பிறந்தநாள் விழாவில் நேபாள பிரதமர் ஷர்மா ஒலி பேசுகையில், இந்தியாவில் உள்ள அயோத்தியில் வேண்டுமென்றால் சர்ச்சை இருக்கலாம். நம் நாட்டில் ( நேபாளத்தில்) உள்ள அயோத்தியில் சர்ச்சை இல்லை. ராமர் பிறந்த இடம் நேபாளம் தான். ராமர் ஒரு நேபாளி என கருத்து தெரிவித்து இருந்தார்.
நேபாள கவிஞர் பனுபக்தா தான், வால்மீகி எழுதிய ராமாயணத்தை நேபாள மொழியில் மொழிபெயத்தவர் ஆவர். பனுபக்தா, 1814ஆம் ஆண்டு பிறந்தார். 1868ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
நேபாள பிரதமரின் பேச்சு பல்வேரு சர்ச்சைகளை கிளப்பியது. அவரது பேச்சு நேபாளத்திலேயே பல்வேரு எதிர்ப்புகளை சம்பாதித்தது. இந்நிலையில், பிரதமரின் பேச்சு குறித்து, நேபாள வெளியுறவு துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ராமர் பற்றிய பிரதமரின் கருத்து அரசியல் கருத்து அல்ல. யாருடைய மனத்தினையும் புண்படுத்த கூறப்படவில்லை.
ராமர் மற்றும் அவரது பிறப்பிடம் தொடர்பாக பல்வேறு கதைகள் உள்ளன. ராமாயணத்தில் கலாச்சார புவியியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய ஆய்வுகள் குறித்து பிரதமர் பேசியுள்ளார் எனவும்,
ராமர் – சீதையின் திருமணத்தை கொண்டாட்ட விழாவானது, இந்தியாவின் அயோத்தியிலிருந்து நேபாளத்தின் ஜனக்பூர் வரை திருமண ஊர்வலமானது நடைபெறும். அதற்காக 2018ஆம் ஆண்டு ஜனக்பூரிலிருந்து அயோத்திக்கு பேருந்துகள் விடப்பட்டது எனவும், இத்தகைய செயல்கள் இரு நாட்டிற்கும் இடையேயுள்ள கலாசார பந்தத்தை குறிப்பிடும் வகையில் உள்ளது. என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.