நேபால் விமான விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு.!
நேபாளத்தில் உள்ள போகாராவில் இருந்து 4 இந்தியர்கள், 2 ஜெர்மனியர்கள், 13 நேபாள பயணிகள் மற்றும் 3 விமான ஊழியர்கள் உட்பட 22 பேருடன் தாரா ஏர் நேற்று விமானம் மாயமானது. நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் தசாங் பகுதி, சனோஸ்வேர்பிர் என்ற இடத்தில் சுமார் 20 மணி நேரத்திற்குப் பிறகு அந்நாட்டு ராணுவத்தால் விபத்து நடந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 22 பேரும் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக குறைவு என அதிகாரிகள் தகவல் தெரிவித்து விட்டனர். இதில் 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன அடையாளம் தெரியாதபடி, உடல்கள் சீதைந்துள்ளதாகவும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நேபாள காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.
இதில் மற்றோரு பெரிய சோகம் என்னவென்றால், தனுஷாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர். விமான விபத்தில் சிக்கிய 13 நேபாளிகளில் 7 பேர் தனுஷாவின் மிதிலாவை சேர்ந்தவர்கள்.
இதில், 42 வயதான ராஜன் குமார் கோலே மற்றும் அவரது உறவினர்கள் விமான விபத்தில் சிக்கியுள்ளனர் என தகவல்கள் கிடைத்துள்ளது. ராஜனின் தந்தை இந்திரா பகதூர் கோல், தாய் ரம்மையா தமாங், மாமா புருஷோத்தம் கோல், அத்தை துளசாதேவி தமாங், மாமா மகர் பகதூர் தமாங் மற்றும் மைஜு சுகுமாயா தமாங் மற்றும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் விபத்துக்குள்ளானதால் மிதிலா முனிசிபாலிட்டி கிராம மக்கள் கதறி அழுதனர். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக கிராம மக்கள் வீட்டில் குவிந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.