என் 3 படங்களையும் முதலில் பார்த்தது அவர்தான்.! நெல்சன் கூறிய ரகசியம்…
தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார். அந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த இரண்டு படங்களை தொடர்ந்து தற்போது நடிகர் விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நெல்சன் இயக்கிய இந்த மூன்று படங்களுக்கும் இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைத்திருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த நெல்சன் அனிருத் குறித்து சில விஷயங்களை பேசியுள்ளார்.
அனிருத் குறித்து நெல்சன் கூறியதாவது ” அனிருத் மிகவும் திறமையான இசையமைப்பாளர். இப்பொது விக்ரம், டான், தலைவர் 169 என்று பல படங்களுக்கு இசையமைத்துவருகிறார். அவர் எத்தனை படங்கள் பண்ணினாலுமே ரொம்பவே சின்ஸியரா வேலை செய்வார். இது பெரிய படம், இது சின்னபடம்னு வித்தியாச இல்லாமல் ஒரே மாதிரி வேலை செய்வார்.
அவர் கவனிக்கும் ஒரு விஷயம், படத்தினுடைய கன்டன்ட் அந்த கன்டன்ட் ஜாஸ்தியா இருந்தா, அதை விட ஜாஸ்தியா அவர் மியூசிக் ரீச் இருக்கணும்னு விரும்பி உழைப்பார். இது ஒரு நல்ல விஷயம். நான் எப்ப படம் முடிச்சாலுமே முதன்முதல்ல படத்தை போட்டு அனிருத் கிட்டதான் காண்பிப்பேன். என் 3 படங்களையும் முதலில் அவர்தான் பார்த்திருக்கார். அவர்தான் முதலில் விமர்சனம் கூறுவார்” என்று நெல்சன் கூறியுள்ளார்.