கடலில் தூக்கி வீசினாலும் நற்றுணையாவது நமச்சிவாயமே!!பறைசாற்றும் தெப்பத்திருவிழா..நெல்லையப்பர் கோவில் தொடங்குகிறது.!

Default Image

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதியம்மன் கோயிலில் மார்ச்., 8ஆம் தேதி தெப்பத் திருவிழா வெகுவிமர்சையாக  நடைபெற உள்ளது.

பண்டைய காலத்தில் சைவ மதத்திற்கும் சமண மதத்திற்கும் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டதை அனைவரும் அறிவோம்.இந்த கருத்து வேறுபாடு காரணமாக  சைவசமயக் குரவா்களில் ஒருவரான அப்பா் என்று அழைக்கப்படுகின்ற திருநாவுகரசரின் ஆழ்ந்த பக்தியினை பரிசோதிக்கும் விதமாக கல்லில் கட்டி கடலில் போட்டாா்கள் சமண மதத்தினர்.

சற்றும் அஞ்சாமல் ஆண்டவனையே நினைத்து அப்பா்  “கற்றுணை பூட்டியோா் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே” என்று உரக்க பக்தி சிறிதும் குறையாமல் திருவிளையாடல் புரியும் சிவபெருமானை நினைந்து பாடினாா்.அப்பரை கட்டிய கல்லானது தெப்பமாக மாறி கடலில் மிதந்தது. இத்தெப்ப உற்சவம் மூலம் அப்பா் பெருமான் தன் பக்தியால் யாரும் அறிய முடியாத அந்த சிவனின் அருளை அகில உலகிற்கு உணா்த்தியும் இறைவனின் திருக்காட்சி பெற்றாா் என்கிறது புராணம்.இந்த அற்புதமாக நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் நெல்லையப்பர் கோவிலில்  ஆண்டுதோறும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

அதன்படி, நடப்பாண்டிற்கான திருவிழாவானது வரும் 8 ஆம் தேதி இரவு 7 மணிக்கு அம்மன் சந்நிதி அருகில் அமைந்துள்ள பொற்றாமரை தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அப்பா் பெருமான் பவனி வரும் விழா நடைபெறகிறது.

தொடர்ந்து திருத்தெப்ப மண்டபத்தில் கைலாச பா்வத வாகனத்தில் சுவாமி எழுந்தருளியும் உடன் தங்கக் கிளி வாகனத்தில் அம்பாள்  எழுந்தருளி அப்பா் பெருமானுக்கு காட்சி கொடுக்கின்ற அற்புத நிகழ்வு நடைபெறகிறது.இந்த கண்கொள்ள காட்சியைக் காண ஏராளமான பக்தர்கள் வரவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்