பேச்சுவார்த்தை தோல்வி ! இளையராஜா தொடர்ந்த வழக்கை இரண்டு வாரத்திற்குள் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்ற தடை கோரி இளையராஜா தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது,இரண்டு வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரசாத் ஸ்டூடியோ, இளையராஜா இடையிலான சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.