தீராத கண் திருஷ்டி நீங்க இந்த தண்ணீரில் உங்கள் பாதத்தை கழுவினால் போதும்.
கல்லடி பட்டாலும் கண் அடி படக்கூடாது என்று முன்னோர்கள் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். வாழ்க்கையில் சந்தோஷங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நபர்கள் திடீரென பல சறுக்கல்களை சந்திப்பார்கள். அல்லது காய்ச்சல் போன்ற உபாதைகள் அதிகரிக்கும். முகம் கருத்து போய் சோர்வாகவும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவார்கள். இதனால் மனம் நொந்து செய்வதறியாது தவிப்பார்கள். செய்வினை, சூனியம் போன்று யாரும் இவர்களுக்கு செய்திருந்தாலோ அல்லது ஏதாவது கழிப்புகளை தெரியாமல் இவர்கள் தாண்டியிருந்தாலோ இது போன்று நேரலாம்.
கண் திருஷ்டிகளால் அல்லல் படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். ஞாயிற்று கிழமை மாலை 6 மணிக்கு மேல் இதை செய்வது சிறந்தது. பிளாஸ்டிக் பக்கெட்டில் பாதம் மூழ்கும் வரை கால் பொறுக்கும் சூட்டில் சுடு தண்ணீர் ஊற்றி வைத்து கொள்ளுங்கள். அதில் 2 வெற்றிலைகளை நன்கு கிழித்து போட்டுக்கொள்ளுங்கள். மேலும் கொஞ்சம் மஞ்சள் தூள், 1 கைப்பிடி கல் உப்பு, சிறிதளவு மருதாணி இலைகள் மற்றும் காய் சேருங்கள். இவற்றை நன்கு கலந்து கொண்டு அதில் கால் பாதங்கள் முழுவதுமான மூழ்குமாறு 10 நிமிடங்கள் வைத்து கொள்ளுங்கள்.
அந்நேரத்தில் உக்கிர தெய்வங்களான காளி, நரசிம்மர், பிரத்தியங்கிரா தேவி, அங்காளபரமேஸ்வரி, துர்க்கையம்மன் போன்ற உங்களுக்கு பிடித்த தெய்வத்தை நினைத்து கொள்ளலாம். அனுமனையும் நினைத்து கொள்ளலாம். நினைத்த தெய்வத்திடம் மனதார வேண்டிக்கொள்ளுங்கள். எதிர்மறை சக்திகள் உங்களை விட்டு நீங்கி விட வேண்டும் என்று வேண்டிக்கொண்டு 10 நிமிடம் கழித்து கால்களை வெளியே எடுத்து விட்டு தூய்மையான நீரால் கால்களை கழுவிக்கொள்ளுங்கள். அந்த பக்கெட்டில் இருக்கும் தண்ணீரை தொடாமல், வீட்டிற்கு வெளியே இருக்கும் மண்ணில் ஊற்றி விடலாம். இது போன்று வாரம் ஒரு முறை செய்தாலே கண் திருஷ்டி, ஏவல் போன்றவை நீங்கி விடும்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…