#FASTag ரிசார்ஜ் செய்ய வேண்டுமா? இதோ! எளிமையான மூன்று வழிகள்!
ஃபாஸ்ட் டேக் ரிசார்ஜை எளிமையாக தற்பொழுது, UPI அல்லது BHIP பேமெண்ட் மூலமாக உங்களின் மொபைலில் நீங்களே செய்து கொள்ளலாம். அது எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து காணலாம்.
சுங்க சாவடிகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், மக்களின் நேரத்தை சேமிக்க நெடுஞ்சாலை துறை, “ஃபாஸ்ட் டேக்” முறையை அமல்படுத்தியது. இதன் மூலமாக ஒரு அடையாள எண் கொண்ட ஒரு ஸ்டிக்கர் உங்கள் வாகன கண்ணாடியில் ஓட்டப்படும். நமது வாகனம், சுங்க சாவடியை கடந்து செல்லும்போது அந்த ஸ்டிக்கரை அங்குள்ள கருவி ஸ்கேன் செய்து நமது வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணத்தை எடுத்துக்கொள்ளும்.
இதற்கு நாம் ரிசார்ஜ் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பல எளிமையான முறைகள் இருக்கும் நிலையில், உங்களின் UPI அல்லது BHIP பேமெண்ட் மூலமாக உங்களின் மொபைலில் நீங்களே செய்துகொள்ளலாம். குறிப்பாக கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் மூலமாக சுலபமாக ரிசார்ஜ் செய்துகொள்ளலாம். அதன்படி எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து காணலாம்.
கூகுள் பே:
- முதலில் உங்கள் மொபைலில் கூகுள்-பே செயலியை ஓபன் செய்யவும்.
- அதில் Business & Bills-ஐ கிளிக் செய்து, மெனுவில் explore-ஐ கிளிக் செய்க.
- அதில் இருக்கும் சர்ச் பாரில் “FASTag” என சர்ச் செய்து, அதில் வழங்கப்பட்டருக்கும் வங்கியில் உங்களிடம் இருக்கும் வங்கியை தேர்வு செய்யுங்கள்.
- உங்களின் கார் எண் போன்ற அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு, அதற்கான கட்டணத்தைச் செலுத்துங்கள்.
- இவ்வாறு செய்தால், கூகுள் பே மூலம் நீங்கள் எளிதாக ரிசார்ஜ் செய்யலாம்.
போன் பே:
- போன் பே செயலியை ஓபன் செய்து, FASTag Recharge என்பதை தேர்வு செய்யவும்.
- அதில் வழங்கப்பட்டிருக்கும் வங்கி பட்டியலிலிருந்து, உங்களிடம் இருக்கும் வங்கியை தேர்வு செய்யுங்கள்.
- அதன்பின் கார் எண் போன்ற அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு, FASTag ஐ ரீசார்ஜ் செய்ய கட்டணம் செலுத்துங்கள்.
- அவ்வாறு செய்தால், உங்கள் FASTag இப்போது ரீசார்ஜ் செய்யப்பட்டது.
பேடிஎம்:
- பேடிஎம் செயலியை ஓபன் செய்து, மெயின் மெனுவில் உள்ள Show more விருப்பத்தை கிளிக் செய்து, FASTag Recharge-ஐ தேர்வு செய்யவும்.
- அதில் வழங்கப்பட்டிருக்கும் வங்கி பட்டியலிலிருந்து, உங்களிடம் இருக்கும் வங்கியை தேர்வு செய்யுங்கள்.
- அதன்பின் உங்களின் அனைத்துவிபரங்களையும் உள்ளிட்டு, உங்கள் ஃபாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்து பணம் செலுத்துங்கள்.