18 ஆண்டுகளுக்கு இலவச Wifi வசதி வேண்டுமா ? அப்போ உங்க குழந்தைக்கு இந்த பெயரை வைங்க !
சுவிட்சர்லாந்தை சேர்ந்த இணைய நிறுவனம் பெயரை வைத்தால் 18 ஆண்டுகளுக்கு இலவச WIFI.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு இணைய சேவை வழங்கும் நிறுவனமான ட்விஃபி (Twifi) தங்களது பிராண்டின் பெயரை குழந்தைக்கு பெயர் சூட்டுவதால் அடுத்த 18ஆண்டுகளுக்கு இலவச வைஃபை வசதியை வழங்கும் புதுமையான திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள அந்த நிறுவனம் இவ்வாறு எங்கள் நிறுவனத்தின் பெயரை வைப்பதன் மூலம் .அவர்கள் தங்கள் பருவ வயதை அடையும் வரை முற்றிலும் இலவசமாக இணையத்தில் உலாவ அனுமதிக்கப்படுகிறார்கள் .மேலும் ஒருவருக்கு ஒரு மகள் இருந்தால், அவள் பெயர் ட்விஃபியா என்றும், மகன் இருந்தால், அவன் பெயர் ட்விஃபஸ் என்றும் வைக்கலாம் என்று தெரிவித்தது.
அதன்படி சுவிட்சர்லாந்தில் உள்ள 30 மற்றும் 35 வயதுடைய ஒரு தம்பதியினர் தங்கள் மகளின் பெயரில் இரண்டாவது பெயராக ட்விஃபியா (Twifia) என்று பெயரிட்டு இலவச வைஃபை வசதி என்ற வாய்ப்பை பெற்றுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த குழந்தையின் பெற்றோர்கள் இந்த வைஃபைக்காக செலவழித்த பணத்தை தங்கள் மகளின் சேமிப்புக் கணக்கில் வைப்பதாக கூறியுள்ளனர். இது ஒரு காரை வாங்குவதற்கு பணத்தை பயன்படுத்தவும் அல்லது அவள் வளர்ந்தவுடன் வாகனம் ஓட்ட கற்றுக்கொள்ள பயன்படும் என்று நம்புவதாக அவர்கள் கூறினர்.