நெட்பிளிக்ஸில் இலவசமாக படங்கள், சீரியஸ் பார்க்க ஆசையா?? அப்ப இதனை செய்யுங்கள்!!

Published by
Surya

தொலைத்தொடர்பு நிறுவனங்களான VI, ஜியோ, நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் இலவச சந்தாவை வழங்குகிறது.

கடந்த 7 மாத காலங்களுக்கு முன், ஓடிடி தளங்கள் என்றாலே பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் காரணமாக, வீட்டிலே முடங்கியிருந்தனர். அவர்களின் பொழுதுபோக்கிற்காக நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி உள்ளிட்ட ஓடிடி தளங்களை உபயோகிக்க அரமித்தனர். அதிலுள்ள படங்கள், வெப் சீரியஸ் உள்ளிட்டவைகளை பார்த்து தங்களின் நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் நெட்பிளிக்ஸ், உலகளவில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. இதில் ஒளிபரப்பப்படும் பல வெப் சீரியஸ், உலகளவில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. ஆனால் இதற்கு அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதால், அவ்வளவு கட்டணம் செலுத்தி பார்க்கவேண்டுமா என பலருக்கும் தோன்றியது. இது இந்த நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பப்படும் அனைத்து படங்கள் மற்றும் வெப் சீரியஸ் அனைத்தும் இலவசமாக பார்க்க முடியுமா என பலரும் ஏங்கி வந்தனர்.

இருப்பினும் நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட முன்னணி ஓடிடி தளங்கள், சோதனை அடிப்படையில் 30 நாள் இலவச சேவைகளை வழங்கி வந்தனர். தற்பொழுது அமேசான் ப்ரைம் இந்த சலுகையை வழங்கி வருகிறது. ஆனால் நெட்பிளிக்ஸ் அதனை நிறுத்திவிட்டது. இதனை தொலைத்தொடர்பு நிறுவனங்களான VI, ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. VI மற்றும் ரிலைன்ஸ் ஜியோ நிறுவனம், இதுபோன்ற சலுகைகளை தங்களின் பயனர்களுக்கு வழங்கி வருகிறது.

அந்தவகையில், VI வழங்கும் ரூ.1099 போஸ்ட்பெய்ட் திட்டத்தின் மூலம், ரூ.999 மதிப்பிலான ஒரு வருடத்திற்கான அமேசான் ப்ரைம் மற்றும் ஒரு வருடத்திற்கான நெட்பிளிக்ஸ் சந்தாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் அன்லிமிடெட் கால்ஸ், அன்லிமிடெட் டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

ரூ.399 விலையுள்ள ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்தில் 75 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த 75 ஜிபி டேட்டா முடிந்துவிட்டால், ஒரு ஜிபிக்கு ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும். இதில் அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளத்தின் பேசிக் பேக்கை வழங்குகிறது. அதேபோல, ரூ.599 ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்துடன், பயனர்கள் 100 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள்.

மேலும், ரூ.799 ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டம் பயனர்களுக்கு 150 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த அனைத்து திட்டத்திலும் 200 ஜிபி ரோல் ஓவர் டேட்டாவை வழங்குகிறது. ரூ.999 ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்தில் 200 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதில் 500 ஜிபி ரோல்ஓவர் திட்டத்தை வழங்குகிறது.

Published by
Surya
Tags: JioNetflixVi

Recent Posts

சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!

சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!

லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…

3 minutes ago

பஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம்…மஹாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!

காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

24 minutes ago

வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசு -பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு!

ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான்  அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…

58 minutes ago

கட்டாய கடன் வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை! சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…

2 hours ago

தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி உயிரிழப்பு எதிரொலி! பள்ளிக்கு சீல்!

மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…

2 hours ago

Bye Bye ஸ்டாலின்.., 2026-ல் திமுகவுக்கு பெரிய ‘ஓ’! இபிஎஸ் கடும் விமர்சனம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…

2 hours ago