உலகப்பணக்காரர் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை உலகமெங்கும் தெரிய செய்தவர் இன்றும் அவருடைய பயன்பாடுகள் சவால் விடும் வகையில் உள்ளன.அத்தகைய படைப்புகளுக்கு சொந்தக்காரர்ர் பில்கேட்ஸ்.
சாதரணமாக நாம் எதையாவது பேசும் போது ஆமா இவரு பெரிய பில்கேட்ஸ் என்ற வார்த்தையை தான் உடனே வரும் அவ்வாறு பட்டித்தொட்டி எல்லாம் பரிட்சமானவர் அவருக்கு பணக்காரர் என்றதுமே நம் நினைவுக்கு வரும் முதல் பெயர் பில்கேட்ஸ் தான். அவருக்கு மருமகன் ஆக வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்..ஐயோ.. என்று சொல்ல தோன்றுகிறதல்லவா.
கோடீஸ்வர் பில்கேட்ஸ்க்கு இரண்டு மகள்கள் அதில் ஒரு மகளான ஜெனிபர் கேத்தரின் இவரைத்தான் நயெல் நசார் என்பவரோடு திருமணம் நடக்க உள்ளது.இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணப்பேச்சுக்கு காதல் வந்துள்ளது.
என்னது பில்கேட்ஸ் மாப்பிள்ளை யா..?யாருப்பா அவரு என்று மனதிற்குள் சற்றென்று ஒரு கேள்வி வந்துட்டு போயிருக்கும் யார் அந்த அதிஷ்டக்கார மாப்பிள்ளை என்றால் எகிப்து நாட்டைச் சேர்ந்த நயெல் நாசர் தான். இவர் ஒரு இளம் குதிரையேற்ற வீரர். இவரை தான் திருமணம் செய்ய உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு பில்கேட்ஸ் மகள் ஜெனிபர் கேத்தரின் உறுதி செய்துள்ளார்.அதில் கூறிப்பிட்ட ஜெனிபர் தம்முடைய வாழ்க்கையில் இதுவரை அவருடன் இருந்த நாட்கள் அழகானது அவரோடு இருக்கும் தருணத்தை இனியும் மிஸ்பண்ண முடியாது என்று அந்த பதிவில் தனது காதலர் நயெல் நாசர் மீது காதல் மழை பொழிந்துள்ளார்.
23 வயதே நிரம்பியுள்ள ஜெனிபர் கேத்தரின், 28 வயதான நயெல் நசார் இருவரும் சில மாதங்களாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் பில்கேட்ஸ் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்ட நிலையில் தற்போது அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நிறைவடைந்து விட்டதாகவும், அடுத்த ஆண்டு திருமணம் நடக்க உள்ளதாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை கேட்ட உள்ளூர் மாப்பிள்ளைகள் எல்லாம் கொடுத்த வைத்தவர் தான் இவர் என்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகினறனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…