நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நிழல் திரைப்படம் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.அதனை தொடர்ந்து இவர் அண்ணாத்த, நெற்றிக்கண்,காத்து வாக்குல ரெண்டு காதல் , மலையாளத்தில் நிழல் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியுள்ளார்.
இதில் மலையாளத்தில் உருவாகியுள்ள நிழல் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 19-ம் தேதி தொடங்கி ,45 நாட்கள் படப்பிடிப்பிற்கு பின்னர் கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது.இந்த படத்தினை ஒளிப்பதிவாளரான அப்பு என் பட்டாத்திரி இயக்கியுள்ளார்.மேலும் இந்த படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக குஞ்சாக்கோ போபன் நடித்துள்ளார் .சூரஜ் எஸ் குருப் இசையமைத்துள்ள இந்த படத்தில் சைஜூ குருப் ,வினோத் கோவூர் ,அனீஷ் கோபால் ,திவ்யபிரபா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.இறுதி கட்டத்தில் உள்ள போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடர்ந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது நயன்தாராவின் நிழல் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது நிழல் படத்தினை ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…