நயன்தாராவின் "நெற்றிக்கண்" படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம் !

நயன்தாரா பிகில் மற்றும் தர்பார் படத்திற்கு மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘நெற்றிக்கண்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். இந்த படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன், தனது ரவுடி பிக்சர்ஸ் மூலம் தயாரித்து வருகிறார்.
சென்னையில் நடந்த இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் தொடங்கிவுள்ளதாக படத்தின் இயக்குனர் மிலிந்த் ராவ் அறிவித்துள்ளார்.