கையில் குழந்தையுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன்.! வைரலாகும் புகைப்படம்.!
கையில் குழந்தையுடன் விக்னேஷ் சிவன் அருகில் நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.
கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். 2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இவர்கள் இருவரின் காதல் ஆரம்பித்தது என்பது அனைவரும் அறிந்ததே. இவர்கள் இருவருக்கும் நிச்சியதார்த்தம் நடந்து முடிந்தது.
நயன்தாரா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான நெற்றிக்கண் திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனையடித்து அவர் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகிறது.
அடுத்ததாக நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக் கானுடன் நடிக்க உள்ளதாகவும், அதனை தொடர்ந்து மேலும் இரண்டு கதாநாயகியை மையமாக கொண்ட படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் நடிகை நயன்தாரா கையில் குழந்தையுடன் விக்னேஷ் சிவன் அருகில் நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.