தன் காதலனுடன் சென்று அத்திவரதரை தரிசனம் செய்த நயன்தாரா !

Default Image

கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் இன்று 46-வது நாளாக அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அதிலும் கடந்த சில நாள்களாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டு உள்ளது.

இன்று ஆடி கருட சேவை என்பதால் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.இதனால் இன்று பிற்பகல் 12 மணிக்கு கிழக்கு கோபுர வாசல் மூடப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள பக்தர்கள் மட்டும் மாலை 5 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பிற்பகல் 12 மணி உடன் விஐபி மற்றும் விவிஐபி தரிசனம் நிறுத்தப்பட்டது.நாளையுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவடைவதால் நள்ளிரவு 1 மணிக்கு நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அத்திவரதரை வழிபட்டனர். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் நயன்தாராவிற்கு பிரசாதம் கொடுக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi