தனது கெத்தை விட்டுக்கொடுக்காத நயன்தாரா! அப்செட்டில் பிகில் படக்குழு!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கியுள்ள திரைப்படம் பிகில். இந்த திரைப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். கதிர், விவேக், யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி என நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய், அட்லீ, ஏ.ஆர்.ரகுமான், யோகிபாபு, ஆனந்தராஜ், விவேக் என பலரும் கலந்து கொண்டனர். ஆனால் நாயகி நயன்தாரா மட்டும் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. அவர் சமீப காலமாக எந்தவித திரைப்பட விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை. தெலுங்கில் பிரமாண்டமாக உருவான சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், அந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கூட கலந்துகொள்ளவில்லை.
சில தினங்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தனது நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சாம்பியன்ஸ் டிராபி வருது இப்படியா பண்ணுவீங்க? ஸ்டோய்னிஸை வறுத்தெடுத்த ஆரோன் பிஞ்ச்!
February 12, 2025![marcus stoinis](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/marcus-stoinis-1.webp)
அத்திக்கடவு – அவினாசித் திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை! ஓபிஎஸ் அறிக்கை!
February 12, 2025![O. Panneerselvam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/O.-Panneerselvam.webp)
காதலர் தின ஸ்பெஷல் : ஒரே நாளில் வெளியாகும் 10 திரைப்படங்கள்!
February 12, 2025![TAMIL MOVIES](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TAMIL-MOVIES.webp)